Wednesday, June 12, 2019

Saturday, June 1, 2019

pug female puppy for sales...

cute pug  female puppy sales in thoothukudi  contact-9095950945, one vaccination  in completed...

Monday, May 27, 2019

Friday, May 24, 2019

pug female puppy sales in thoothukudi ....

cute pug  female puppy sales in thoothukudi  contact-9095950945, one vaccination  in completed

சூரத் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து...13 மாணவர்கள் பலி

சூரத் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மாணவர்கள்  தப்பிக்கும் குலைநடுங்கவைக்கும் வீடியோ காட்சி

குஜராத் மாநிலம் சூரத்தில் வணிக வளாகத்தின் 4வது மாடியில் இயங்கி வந்த தனியார் பயிற்ச்சி மையத்தில் தீ விபத்து

உயிரை காப்பாற்றிக்கொள்ள கீழே குதித்த சுமார் 13 மாணவர்கள் உயிரிழப்பு

தீயை அணைக்கும் பணியில் 18 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் #Surat

குஜராத்: சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15பேர் உயிரிழப்பு; 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என சூரத் காவல் ஆணையர் தகவல் #Gujarat #FireAccident

Saturday, May 18, 2019

குற்றாலம் மெயின் அருவி இன்றைய (19-05-2019) நிலவரம்...


நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி இன்றைய (19-05-2019) நிலவரம்...

Friday, May 17, 2019

ஊட்டி உலக புகழ்பெற்ற 123வது மலர் கண்காட்சி


ஊட்டி உலக புகழ்பெற்ற 123வது மலர் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார்.

Thursday, May 16, 2019

சர்வதேச அருங்காட்சியகதினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சிகள்

சர்வதேச அருங்காட்சியகதினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சிகள்
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம், லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகம். அதுபோல இந்தியாவில் மிகப்பெரிய அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இரண்டாவது மிகப்பழமையான  அருங்காட்சியகமாக விளங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாவட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. நெல்லை அரசு அருங்காட்சியகம் 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைத்து தரப்பினரையும் அருங்காட்சியகம் பக்கம் தங்களின் பார்வையினை திருப்ப வைத்து ஒரு சிறந்த கலாச்சார மையமாக செயல் பெற்று வருகின்றது.
சர்வதேச அருங்காட்சியகதினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 18/05/2019 அன்று காலை 11 மணிக்கு  மகாத்மா காந்தி – ஒரு சகாப்தம் என்கிற தலைப்பில் காந்தியடிகள் அவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள், தபால் தலைகள், மகாத்மா காந்தி உருவம் பொதித்த நாணயங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றின் கண்காட்சியும் 25 ஆண்டுகளுக்கு முந்திய நூற்றுக்கும் மேற்பட்ட அரிய தபால்தலைகள் மற்றும் முதல் நாள் தபால் உறைகளின் கண்காட்சியும், மாணவர்களின் ஓவியக்கண்காட்சியும் தடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர்  சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்தார்.

Dobberman male puppy for sale,...


நெல்லை சந்திப்பில் வீடு விற்பனைக்கு ...

நெல்லை சந்திப்பு C.N. கிராமம், பெருமாள்கோவில் அக்ரஹாரத்தில் 5.75 சென்ட் மனையில் . மாடி வீடு விற்பனைக்கு ... மேலும் விபரங்களுக்கு 9489374095

Wednesday, May 15, 2019

தெற்கு புறவழிச்சாலையில் கார் மோதி விபத்து..

நெல்லை தெற்கு புறவழிச்சாலை வாய்க்கால் பாலம் அருகே மதுரையிலிருந்து நெல்லை நோக்கி வந்த கார்மோதி மீன் வியாபாரி படுகாயம், கார் ஓட்டி வந்த விக்னேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை...

ஐபிஎம் இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்கள் பணி நீக்கம்

உலகின் மிகப் பெரிய ஐ.டி, நிறுவனமான ஐபிஎம் இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.எனவே 300 ஊழியர்களை ஐபிஎம் இந்தியாவிலிருந்து நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப திறன் படைத்தவர்களை புதியதாக பணிக்கு எடுக்க உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊழியர்களை பணிநீக்கம் செய்தாலும் அவர்கள் புதிய தொழில்நுட்ப திறனுடன் வரும் போது அவர்களை மீண்டும் பணிக்கு எடுக்கும் முடிவில் தான் உள்ளோம் என்று ஐபிஎம் நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இது ஐபிஎம் நிறுவனத்தில் மட்டும் உள்ள சிக்கல் இல்லை. ஐ.டி., துறை முழுவதுமாகவே புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது இது போன்ற சிக்கலில் உழியர்கள் மாட்டிக்கொளவார்கள். ஆனால் ஐபிஎம் நிறுவனத்தில் செய்யப்பட உள்ள இந்த நடவடிக்கையால் இந்திய செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். வளர்ச்சி மிக வேகமாக இருக்கும்.
Sponsored by MGID Earn From TheComfort Of My Home
ஏன் இந்த 300 ஊழியர்களுக்குப் புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்ச்சியை அளித்து தக்கவைத்துக்கொள்ளலாம் என்று ஐபிஎம் நிறுவனத்தைக் கேட்டப் போது, செலவுகள் அதிகமாக இருக்கும். தங்களது மனித வள செலவுகள் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. எனவே தான் ஊழியர்களை வெளியேற்றிப் புதிய ஊழியர்கள பணிக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

திருவேங்கடம் பட்டாசு ஆலை விபத்து...5 பேர் காயம்...





திருநெல்வேலி மாவட்டம்  திருவேங்கடம் பட்டாசு ஆலையில் தீ விபத்து...

நெல்லை  மாவட்டம் வரகனூர் பகுதியில்  செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் கோபால், குருசாமி, காமராஜ், அர்ஜீன்,கனகராஜ் ஆக ஐந்து பேர் காயம் - திருவேங்கடம் போலீசார் விசாரணை - சமையல் செய்தபோது வெடி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல்

Sunday, May 12, 2019

மும்பை அணி சாம்பியன்...






ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது மும்பை அணி*

*4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை அணி சாதனை*

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடை பயிற்சி வகுப்பு...

கோடை விடுமுறையை மாணவ மாணவிகள் பயனுள்ள வகையில் கழிக்க நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மே 1 ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன அதன் தொடர்ச்சியாக வரும் வாரம் 13/05/2019 முதல் 17/ 5 /2019 வரை கலை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் பேப்பர் கலை, செயற்கை இலை மற்றும் மரம் தயாரித்தல் ,ஜூட் சுவர் மாற்றி தயாரித்தல் , செயற்கை ஆபரணம் தயாரித்தல், பானை ஓவியம் , சாக்பீஸ் சிற்பம் தயாரித்தல் போன்ற பல்வேறு கலை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன விருப்பமுள்ள பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் மகளிர் என அனைவரும் கலந்து கொள்ளலாம் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு  8220897095,04622561915 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ .சத்திய வள்ளி அவர்கள் தெரிவித்தார்கள்

Saturday, May 11, 2019

நீலகிரியில் கரடி நடமாட்டம்.,.


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள  அளக்கரை தனியார் தேயிலை தோட்டத்தில் இரண்டு குட்டிககளை முதுகில் தூக்கிகொண்டு உணவு தேடிவந்த கரடி.,,,


தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் விருதுநகர் மாவட்டத்தில்  4 சென்டி மீட்டர் மழையும், ஓசூர், பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

Friday, May 10, 2019

வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் - சென்னை வானிலை மையம் தகவல்

*வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை - சென்னை வானிலை மையம் தகவல்*

*சென்னை, வேலூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் வெப்பம் கொளுத்தி வருகிறது.*

*வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.*

*தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.*

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதினால் போதும் என்று வெளியான தகவல் தவறானது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

11,12 ஆம் வகுப்பில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவர்கள் நலனை கருதி, 500 மதிப்பெண்களுக்கு ஐந்து பாடத்தில் மட்டும் தேர்வு எழுதும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முயற்சிப்பதாக தகவல் வெளியானது. \

மொழிப்பாடங்களில் முதல் தாள், 2-ம் தாள் என்பதை ஒரே தாளாக மாற்றவும் முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழை நீக்க சதி நடப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இது போன்ற தகவல்கள் உண்மையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல் தவறானவை என்றும், இருமொழிக் கொள்கையில் இருந்து தமிழக அரசு ஒருபோதும் விலகாது என்றும் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

மின்னல் இடி தாக்கியதில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி பலி...

மின்னல் இடி தாக்கியதில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி பலி...

நெல்லை சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பிஏ தமிழ்  முதலாம் ஆண்டு பயிலும் மகாலட்சுமி என்ற மாணவி பலி...

விசாரணையில் மாணவிக்கு சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் ஆலங்குளம்  என்ற கிராமம்