Saturday, May 11, 2019

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் விருதுநகர் மாவட்டத்தில்  4 சென்டி மீட்டர் மழையும், ஓசூர், பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

No comments:

Post a Comment