Friday, May 10, 2019

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதினால் போதும் என்று வெளியான தகவல் தவறானது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

11,12 ஆம் வகுப்பில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவர்கள் நலனை கருதி, 500 மதிப்பெண்களுக்கு ஐந்து பாடத்தில் மட்டும் தேர்வு எழுதும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முயற்சிப்பதாக தகவல் வெளியானது. \

மொழிப்பாடங்களில் முதல் தாள், 2-ம் தாள் என்பதை ஒரே தாளாக மாற்றவும் முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழை நீக்க சதி நடப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இது போன்ற தகவல்கள் உண்மையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல் தவறானவை என்றும், இருமொழிக் கொள்கையில் இருந்து தமிழக அரசு ஒருபோதும் விலகாது என்றும் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment